பிறவா நிலை தரும் நடராஜர்

முனிவர்களின் தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி ஆனந்த தாண்டவம் ஆடி அவர்களுக்கு பிறவா நிலையை தந்து முக்தி அளித்தார்.
பிறவா நிலை தரும் நடராஜர்
Published on

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜர் சபையில், சிவகாமவல்லியுடன் அருளும் நடராஜர் 'சுந்தரத் தாண்டவர்' என்று அழைக்கப்படுகிறார்.

இந்தத் தலம் தவம் புரிவதற்கு ஏற்ற தலம் என்பதை அறிந்த அகத்தியர், வாமதேவர், காசிபர், அத்திரி, பரத்வாஜர், கவுதமர், விசுவாமித்திரர், ஜமதக்கினி, வசிஷ்டர் ஆகிய ஒன்பது முனிவர்கள் இங்கே தனித்தனியாக தீர்த்தம் உருவாக்கி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, சிவனடி வேண்டி ஆயிரம் ஆண்டுகள் தவமியற்றினர். அவர்கள் தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி ஆனந்த தாண்டவம் ஆடினார். மேலும் அவர்களுக்கு பிறவாநிலையைத் தந்து முக்தி அளித்தார். அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, சித்ரா பவுர்ணமியில் இங்கு வந்து நவ தீர்த்தங்களில் நீராடி தம்மை தரிசிக்கும் அன்பர்களுக்கும் பிறவா வரம் அருள்வதற்காக, சந்திர சூடாமணி தாண்டவராக இங்கு அருள்கிறாராம் நடராஜ பெருமான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com