வாரம் ஒரு திருமந்திரம்

திருமூலர் இயற்றிய திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம்.
வாரம் ஒரு திருமந்திரம்
Published on

இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்..

பாடல்:-

அதுஇது என்னும் அவாவினை நீக்கித்

துதியது செய்து சுழியுற நோக்கில்

விதியது தன்னையும் வென்றிட லாகும்

மதி மலராள் சொன்ன மண்டலம் மூன்றே.

விளக்கம்:- ஒன்றிலும் உறுதித் தன்மையோடு இருக்காமல், அதுவா.. இதுவா என்று தடுமாறும் நிலையை நீக்க வேண்டும். நம்முடைய எண்ணமானது, ஓரிடத்தில் நிலை பெற்றிருக்கும் வகையில் சக்தியை வணங்கினால் விதியைக் கூட வெல்லலாம். அமுதம் பொழியும் அந்த அன்னையானவள், வணங்கும் வகையில் கூறியருளிய மூன்று மண்டலங்கள், அக்னி, சந்திரன், சூரியன் ஆகியவை ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com