வாரம் ஒரு திருமந்திரம்

திருமூலர் எழுதிய திருமந்திரம் பக்தியையும், ஆன்மிகத்தின் வழியையும், இன்னும் பலவற்றையும் கற்பிக்கும் நூலாக இருக்கிறது.
வாரம் ஒரு திருமந்திரம்
Published on

அந்த திருமந்திரத்தில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் இங்கே பார்ப்போம்.

பாடல்:- நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியைத்

தேடுவன் தேடிச் சிவபெருமான் என்று

கூடுவன் கூடிக் குரைகழற்கே செல்ல

வீடும் அளவும் விடுகின்றிலேனே

.

பொருள்:- அன்போடு சென்று சேரும் உறவும், நேயமும் கலந்து நம்பெருமானை நான் தேடுவேன். அப்படித் தேடி, சிவபெருமானை கண்டு அவருடைய திருபாதத்தை பற்றிக்கொள்வேன். என்னுடைய கர்மவினைகள் அகன்று, என்னுடை பிறப்பு நீங்கும் வரை, அந்த திருவடிகளை நான் விடமாட்டேன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com