வாரம் ஒரு திருமந்திரம்

திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
வாரம் ஒரு திருமந்திரம்
Published on

இதில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:

இசைந்து எழும் அன்பில் எழுந்தபடியே

பசைந்து எழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்

சிவந்த குருவந்து சென்னிகை வைக்க

உவந்த குருபதம் உள்ளத்து உவந்ததே.

விளக்கம்:

இறைவன் திருவடி நம் உள்ளத்தில் பொருந்துவதால், அதில் அன்பு ஊற்றெடுக்கும். அந்த அன்பினால் இறைவன் நமக்கு மேலும் நெருக்கமாய் ஒன்றிப்போவார். அந்த நிலையில் சிவபெருமான், குருவாக எழுந்தருளி, நம் தலை மீது கைவைத்து அருள்வா. அதனால் இறைவன் திருவடி நம் உள்ளத்தில் பொருந்தும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com