திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை ரத்து

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பவுர்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை ரத்து
Published on

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவில் கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பவுர்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

மே மாதம் 12-ந்தேதி, ஜூலை மாதம் 10-ந்தேதி, ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி, அக்டோபர் மாதம் 7-ந்தேதி, நவம்பர் மாதம் 5-ந்தேதிகளில் பவுர்ணமி கருடசேவ ரத்து செய்யப்பட்டுள்ளன.கருடசேவையை ரத்து செய்ததற்கான காரணங்களை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

ஜூன் மாதம் 11-ந்தேதி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் (3-வது நாள்) நடப்பதாலும், செப்டம்பர் 7-ந்தேதி சந்திர கிரகணம் நிகழ்வதாலும், டிசம்பர் மாதம் 4-ந்தேதி கார்த்திகை தீபம் நடப்பதாலும் பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com