மதுரையில் இன்று தை தெப்பத்திருவிழா... கோலாகலமாக நடைபெற்ற கதிர் அறுப்பு உற்சவம்

நேற்று மதுரை சிந்தாமணியில் கதிர் அறுப்பு உற்சவம் நடைபெற்றது.
மதுரையில் இன்று தை தெப்பத்திருவிழா... கோலாகலமாக நடைபெற்ற கதிர் அறுப்பு உற்சவம்
Published on

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா கடந்த மாதம் 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தை தெப்பத்திருவிழா இன்று நடைபெறுகிறது. இதற்காக வண்டியூர் மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணி நிறைவடைந்தது. அதை தொடர்ந்து தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக நேற்று முன்தினம் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், நேற்று சிந்தாமணியில் கதிர் அறுப்பு உற்சவமும் கோலாகலமாக நடைபெற்றன.

இந்நிலையில் தெப்ப உற்சவம் நடைபெறுவதையொட்டி இன்று மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் சுவாமியும் அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைகிறார்கள். காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சுவாமியும், அம்மனும் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com