திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம்

திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம்
Published on

திருச்சி,

திருச்சி அருகே வயலூரில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. அருணகிரிநாதரால் பாடல்பெற்ற தலமான இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தநிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலாலயம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கின.

ரூ.5 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருப்பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 15-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. 16-ந்தேதி மாலை முதற்கால யாகபூஜையும், நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாகபூஜையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று காலை 4-ம் கால யாக பூஜையும், மாலையில் 5-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ச்சியாக காலை 7.20 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக காலை 9.15 மணிக்கு சகல விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது திரண்டு இருந்த மக்கள் "வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" என கோஷம் எழுப்பினர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்ததும் புனித நீர் பக்தர்களுக்கு எந்திரங்கள் மூலம் தெளிக்கப்பட்டன. பகல் 12.15 மணிக்கு மேல் மகா அபிஷேகம், மகா தீபாராதனை செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

நாளை (வியாழக்கிழமை) முதல் மண்டலாபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் அறங்காவலா குழுவினர், திருப்பணி குழுவினா மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா. கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக சத்திரம், மத்திய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com