வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா: பெரிய தேர் பவனி நாளை நடக்கிறது

புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா 8-ந் தேதி நடைபெறுகிறது.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா: பெரிய தேர் பவனி நாளை நடக்கிறது
Published on

நாகை,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் இது சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. புகழ்பெற்ற இந்த பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான மாதாவின் மின் அலங்கார பெரிய தேர் பவனி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. மாலை 5.15 மணிக்கு செபமாலை மாதா மன்றாட்டு நவநாள் செபத்தை தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தம்புராஜ் தேரை புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மறை மாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.

தொடர்ந்து 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்குடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com