டி20 உலக கோப்பை தோல்விக்கு பின்... பாபர் அசாம் உள்பட 6 வீரர்கள் போட்ட திட்டம்

பாபர் அசாம் உள்பட 6 வீரர்களும் லண்டனை சுற்றி பார்ப்பதுடன், உள்ளூர் அணிகளில் விளையாடுவது பற்றியும் யோசித்து வருகின்றனர்.
டி20 உலக கோப்பை தோல்விக்கு பின்... பாபர் அசாம் உள்பட 6 வீரர்கள் போட்ட திட்டம்
Published on

லாகூர்,

டி20 உலக கோப்பை போட்டியில், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி. எனினும், கனடாவை வீழ்த்தியது.

இறுதியாக அயர்லாந்து அணியுடன் நடந்த போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், புள்ளி கணக்கில் சூப்பர் 8 அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் தேர்வாகவில்லை.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் பிற வீரர்களான முகமது ஆமிர், இமத் வாசிம், ஹாரீஸ் ராப், சதாப் கான் மற்றும் அசாம் கான் ஆகிய 5 பேரும் பாகிஸ்தானுக்கு திரும்புவதற்கு முன் லண்டன் நகரில் விடுமுறையை கழிக்க முடிவு செய்துள்ளனர்.

அவர்கள் 6 பேரும், அணியின் சக வீரர்களுடன் சொந்த நாட்டுக்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக, லண்டனில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பொழுதுபோக்க திட்டமிட்டு உள்ளனர். அவர்களில் சிலர், இங்கிலாந்தில் உள்ளூர் அணிகளில் விளையாடுவது பற்றியும் யோசித்து வருகின்றனர்.

எனினும், உடனடியாக வேறு எந்த பணிகளும் இல்லாத சூழலில், அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், உதவி பயிற்சியாளர் அசார் மஹ்மூத் ஆகியோர் சொந்த நாட்டுக்கு செல்ல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com