பெங்களூரு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - ஷேன் வாட்சன்

கடந்த 2016ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன். இவர் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான், பெங்களூரு, சென்னை அணிகளுக்காக ஆடியுள்ளார். 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார்.

கடந்த 2016ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இறுதிப்போட்டியில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 208 ரன்கள் குவித்தது. 209 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

அப்போட்டியில் 4 ஓவர் பந்துவீசிய வாட்சன் விக்கெட் எதுவும் எடுக்காமல் 61 ரன்கள் விட்டு கொடுத்தார். பேட்டிங்கிலும் 9 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே அடித்தார்.இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசியுள்ள வாட்சன் கூறியதாவது,

2016 ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் தோற்றதற்காக பெங்களூரு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் முடிந்தளவிற்கு நன்றாக தயாராகியிருந்தேன். அது எனது சிறப்பான ஆட்டமாக இருக்கவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், அதுவே எனது மிக மோசமான ஆட்டமாக அமைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். ஆனால் அந்த ஐ.பி.எல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய வாட்சன் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com