ஆசிய கோப்பை கிரிக்கெட்: இன்று 2 லீக் ஆட்டங்கள்

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு அபுதாபியில் நடக்கும் 7-வது லீக்கில் ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் (ஏ பிரிவு) அணிகள் மோதுகின்றன.
இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு துபாயில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, ஹாங்காங்கை (பி பிரிவு) சந்திக்கிறது.






