

துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் இன்று அரங்கேறும் ஏ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இதனால் இரு நாட்டு ரசிகர்களின் ஆர்வம் பல மடங்கு எகிறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்விரு அணிகளும் 2006-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சந்திக்கின்றன.
இந்த நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற பின் அகமது கூறும்பொழுது, இது ஒரு பெரிய போட்டி. அதனால் 280 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என கூறினார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் கூறும்பொழுது, நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம். ஷர்துல் மற்றும் கலீலுக்கு பதிலாக முறையே பும்ரா மற்றும் ஹர்தீக் விளையாடுவர். இன்று நடைபெறும் போட்டி அற்புதம் நிறைந்த ஒன்றாக இருக்கும் என கூறினார்.
போட்டிக்கான வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் அல்லது மனிஷ் பாண்டே, டோனி, கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, ஹர்தீக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.
பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஆசிப் அலி, ஷதப் கான், பஹீன் அஷ்ரப் அல்லது ஜூனைத் கான், முகமது அமிர், ஹசன் அலி, உஸ்மான் கான்.