முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் பெங்களூரு

ஐ.பி.எல். போட்டி தொடரில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் பெங்களூரு அணி உள்ளது.
முதலிடத்தை பிடிக்கும் முனைப்பில் பெங்களூரு
Published on

பெங்களூரு, டெல்லி அணிகள் தலா 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 6 புள்ளிகளுடன் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்கனியை பறிக்கும் அணி புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை எட்டி பிடிக்கும்.

முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தானை எளிதில் தோற்கடித்த பெங்களூரு அணி அதே உத்வேகத்துடன் களம் இறங்குகிறது. கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலமாகும். தேவ்தத் படிக்கல் (3 அரைசதத்துடன் 174 ரன்), டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச் ஆகியோரின் பேட்டிங்கும், யுஸ்வேந்திர சாஹல் (8 விக்கெட்), வாஷிங்டன் சுந்தரின் சுழல் ஜாலமும் பெங்களூரு அணிக்கு பக்கபலமாக இருக்கிறது.

டெல்லி அணியும் பேட்டிங், பந்து வீச்சில் வலுமிக்கதாகவே விளங்குகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் (170 ரன்), ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரிஷாப் பண்ட், ஹெட்மயர் ஆகியோர் பேட்டிங்கிலும், காஜிசோ ரபடா (8 விக்கெட்), நோர்டியா, அஸ்வின் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் கைகொடுக்கிறார்கள். சரிசம பலத்துடன் முட்டிமோதும் இவ்விரு அணிகளில் 4-வது வெற்றி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com