உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க போட்டி: வெறிச்சோடி கிடந்த ஆமதாபாத் மைதானம்

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க போட்டியின்போது ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஸ்டேடியம் ரசிகர்கள் இன்றி காலியாக கிடந்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடக்க போட்டி: வெறிச்சோடி கிடந்த ஆமதாபாத் மைதானம்
Published on

ஆமதாபாத்,

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டம் (பகல்-இரவு) உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஸ்டேடியம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது.

ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஸ்டேடியம் ரசிகர்கள் இன்றி காலியாக கிடந்தது. தொடக்கத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ரசிகர்கள் அமர்ந்து இருந்தனர். 2-வது பாதி ஆட்டத்தின் போது ரசிகர்களின் வருகை ஓரளவு அதிகரித்து அவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 45 ஆயிரத்தை எட்டியது.

மைதானத்தின் வெறிச்சோடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வெளியிட்டு வறுத்தெடுத்தனர். இது போன்ற நிலைமையை தவிர்க்க தொடக்க ஆட்டத்தில் உள்நாட்டு அணியை விளையாட வைக்க வேண்டும். அடுத்த ஆட்டத்தில், கடந்த உலகக் கோப்பையின் இறுதிப்போட்டிக்குரிய அணிகளை மோதவிடலாம் என்று நிறைய ரசிகர்கள் யோசனை தெரிவித்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com