‘அப்பா உங்களுக்கு வயதாகி வருகிறது’ டோனிக்கு, மகள் பிறந்த நாள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனிக்கு நேற்று 37-வது பிறந்த நாளாகும்.
‘அப்பா உங்களுக்கு வயதாகி வருகிறது’ டோனிக்கு, மகள் பிறந்த நாள் வாழ்த்து
Published on

கார்டிப், ஜூலை.8-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனிக்கு நேற்று 37-வது பிறந்த நாளாகும். இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி நிறைவடைந்ததும் தங்கியிருந்த ஓட்டலில் சக வீரர்களுடன் இணைந்து கேக்வெட்டி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார். கேப்டன் விராட் கோலியுடன் அவரது மனைவியான நடிகை அனுஷ்கா சர்மாவும் டோனியை நேரில் வாழ்த்தினார்.

டோனியின் மகள் 3 வயதான ஸிவா, பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா என்ற பாடலை பாடி அப்பா... உங்களுக்கு வயதாகி வருகிறது என்ற வரியுடன் முடித்தது அனைவரையும் கவர்ந்தது. அவரது மனைவி சாக்ஷி பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், நீங்கள் எப்படிப்பட்ட மனிதநேயம் மிக்கவர் என்பதை கூற என்னிடம் வார்த்தைகள் கூட இல்லை. 10 ஆண்டுகளாக உங்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். அது தொடரும். எனது வாழ்க்கையை மிகவும் அழகாக்கியதற்கு அளவில்லாத நன்றியும், அன்பும் உங்களுக்கு என்று குறிப்பிட்டுள்ளார். டோனி காலை அகலமாக விரித்து ஸ்டம்பிங்கில் இருந்து தப்பிக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் வீரர் ஷேவாக் அதை குறிப்பிட்டு உங்களது வாழ்க்கை இதை விட நீண்டதாக இருக்கும். மேலும் உங்களது ஸ்டம்பிங்கை விட வேகமாக எல்லாவற்றிலும் மகிழ்ச்சியை காண்பீர்கள் என்று கூறியுள்ளார்.

2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன டோனி, 20 ஓவர் உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்று கோப்பைகளை வென்றுத்தந்த ஒரே கேப்டன் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com