ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்!
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்!
Published on

மும்பை

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் புகழ்பெற்ற வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மும்பையில் மாரடைப்பால் இன்று காலமானார்.

ஜோன்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 க்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் இடம்பெற்று இருந்தார்.மேலும் மும்பையில் உள்ள ஏழு நட்சத்தி ஓட்டலில் தங்கி இருந்தார்.அங்கு அவர் மாரடைப்பால் காலமானார்.

ஜோன்ஸ் 1984 மற்றும் 1994 க்கு இடையில் ஆஸ்திரேலியாவுக்காக 52 டெஸ்ட் மற்றும் 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

1984 இல் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் ஜோன்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமானார். அவர் கிட்டத்தட்ட 9500 ரன்களை எடுத்து உள்ளார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டு உள்ள இரங்கலில் டீன்ஜோன்ஸ் காலமான செய்தியை நாங்கள் மிகுந்த சோகத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். அவர் திடீரென இருதய நோயால் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறோம், இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆஸ்திரேலிய உயர் தூதரக அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம் என கூறி உள்ளது.

தெற்காசியா முழுவதும் கிரிக்கெட் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் விளையாட்டின் சிறந்த தூதர்களில் ஒருவராக டீன் ஜோன்ஸ் இருந்தார். புதிய திறமைகளைக் கண்டுபிடிப்பதிலும், இளம் கிரிக்கெட் வீரர்களை வளர்ப்பதிலும் அவர் ஆர்வமாக இருந்தார். அவர் ஒரு சிறந்த வர்ணனையாளராக இருந்தார் என கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com