டோனி, ரோகித் சர்மா சாதனையை முறியடித்த தேவ்தத் படிக்கல்..!!

ஐபிஎல் போட்டிகளில் டோனி, ரோகித் சர்மா ஆகியோரின் சாதனையை படிக்கல் முறியடித்துள்ளார்.
Image Courtesy : BCCI / IPL
Image Courtesy : BCCI / IPL
Published on

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்கான வீரர்கள் ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

அந்த ஏலத்தில் கடந்த வருடம் பெங்களூரு அணிக்காக அதிரடியாக விளையாடிய இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார். இந்த தொடரில் அவர் நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 18 பந்தில் 24 ரன்கள் அடித்து நரேன் பந்துவீச்சில் வெளியேறினார்.

இதன்மூலம் ஐபிஎல்லில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை படிக்கல் எட்டினார். 35வது ஐபிஎல் இன்னிங்ஸில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை படிக்கல் எட்டினார்.

இதன்மூலம் ஐபிஎல்லில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய இந்திய வீரர்கள் பட்டியலில் 3ம் இடத்தை ரிஷப் பண்ட்டுடன் பகிர்ந்துள்ளார். 36 இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டிய கௌதம் கம்பீர், 37 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டிய தோனி, ரோஹித் ஆகியோர் சாதனைகளை தகர்த்து 3ம் இடத்தை பிடித்துள்ளார் படிக்கல்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் (31 இன்னிங்ஸ்), 2-வது இடத்தில் சுரேஷ் ரெய்னா (34 இன்னிங்ஸ்) ஆகியோர் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com