'களத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த அணியிலும் அமைதியான சூழலை தோனி ஏற்படுத்தினார்' - ஷீகர் தவான்

தோனி வேடிக்கையான தருணங்களை பெரிதும் விரும்பும் நபர் என இந்திய கிரிக்கெட் வீரர் தவான் தெரிவித்துள்ளார்.
'களத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த அணியிலும் அமைதியான சூழலை தோனி ஏற்படுத்தினார்' - ஷீகர் தவான்
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை உள்ளிட்ட பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்தவர் மகேந்திர சிங் தோனி. களத்தில் எத்தகைய அசாதாரண சூழலையும் அமைதியாக கையாள்வதால், அவரை 'கேப்டன் கூல்' என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் தோனி எப்போதும் அமைதியாகவும், கூலாகவும் இருப்பது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷீகர் தவான் மனம் திறந்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தவான், களத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த அணியிலும் மிகவும் அமைதியான சூழலை தோனி ஏற்படுத்தினார் என்றும், அநாவசியமான விஷயங்களை அவர் பேசமாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் தோனி வேடிக்கையான தருணங்களை பெரிதும் விரும்பும் நபர் என தெரிவித்துள்ள தவான், சமயத்தில் கோபத்தில் கொதித்தெழும் நிலை உருவானாலும், அது ஒட்டுமொத்த சூழலையும் குழப்பிவிடும் என்பதால் அமைதியாக இருந்து கொள்வார் என்றும், அது தான் தோனியின் முதிர்ச்சி தன்மை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com