‘செல்பி’ எடுப்பதற்காக பிள்ளைகளை அழைத்து வந்து டோனிக்கு தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரிகள்

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சில தினங்கள் தங்கி இருந்தார்.
‘செல்பி’ எடுப்பதற்காக பிள்ளைகளை அழைத்து வந்து டோனிக்கு தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரிகள்
Published on

சென்னை,

டோனியுடன் புகைப்படம் எடுக்க அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் தங்களது பிள்ளைகளுடன் வந்ததாக கூறப்படுகிறது. இதே போல் முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் தனது பேரனுடன் அங்கு வந்துள்ளார். டோனியுடன் செல்பி எடுத்துக் கொள்ள அவர்கள் போட்டாபோட்டியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் டோனிக்கு அதிக அளவில் தொல்லை தர ஆரம்பித்தனர். இதனால் எரிச்சல் அடைந்த டோனி தரப்பில் அணி மேலாளர் ரசூல் மூலம் அங்கு காவலுக்கு இருந்த உயர் பெண் போலீஸ் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. செல்பி என்ற பெயரில் அவருக்கு இத்தகைய இடையூறு செய்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com