டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல்

ஐபிஎல் போட்டிக்கு டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் அடுத்த வாரம் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல்
Published on

மும்பை,

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் திருவிழாவை வரவேற்கத் தயாராக உள்ளனர்.

அத்துடன் கெரோனா பாதிப்பில் வீட்டில் இருந்த வீரர்கள், இப்போது ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த முறை கோப்பை வெல்ல வேண்டும் என்பதில் அனைத்து அணிகளுமே தீவிரமாக உள்ளன. அத்துடன் தங்கள் அணியை கட்டமைப்பதிலும் அனைத்து அணியினரும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் சென்னையில் அடுத்த வாரம் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com