இந்திய அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு - நடராஜன்

இந்திய கிரிக்கெட் அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கிறது என நடராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு - நடராஜன்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் 100-வது 'காபி- வித் கலெக்டர்' நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடராஜன்,

விளையாட்டுத் துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் இளைஞர்களுக்கு இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள். பிள்ளைகளின் விளையாட்டுக்காக தங்களது நேரத்தை செலவிடுகிறார்கள். விளையாட்டுத் துறையில் இன்று பெண்கள் பலர் சாதிக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கிறது. காயம் ஏற்பட்டதன் காரணமாகவே எனக்கு இந்திய அணியில் சரியாக இடம் கிடைக்கவில்லை. விளையாட்டுத் துறை சிறப்பாகவும் வேகமாகவும் முன்னேறி வருகிறது. என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com