சுயசரிதை புத்தகத்தில் விமர்சித்த அப்ரிடிக்கு கம்பீர் பதிலடி

சுயசரிதை புத்தகத்தில் விமர்சித்த அப்ரிடிக்கு, கவுதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
சுயசரிதை புத்தகத்தில் விமர்சித்த அப்ரிடிக்கு கம்பீர் பதிலடி
Published on

புதுடெல்லி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தில் இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீரை வம்புக்கு இழுத்துள்ளார். கம்பீருக்கு மனரீதியாக ஏதோ பிரச்சினை இருக்கிறது. அவரிடம் ஆளுமை திறன் கிடையாது. கிரிக்கெட்டில் சாதாரணமான ஒரு வீரர். அவருக்கு குறிப்பிடத்தக்க சாதனை எதுவும் கிடையாது என்று கூறியிருந்தார்.

இதற்கு கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அப்ரிடி நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள். எது எப்படியோ மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தானியர்களுக்கு இந்திய அரசு இன்னும் விசா வழங்குகிறது. இங்கு வாருங்கள். தனிப்பட்ட முறையில் உங்களை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 2007-ம் ஆண்டு கான்பூரில் நடந்த ஒரு ஆட்டத்தில் கம்பீரும், அப்ரிடியும் களத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது நினைவு கூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com