கடுமையாக உழைத்து அரையிறுதிக்கு வந்ததில் மகிழ்ச்சி - நவீன் உல் ஹக்

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

கிங்ஸ்டவுன்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள் மட்டுமே அடித்தது. இருப்பினும் மனம் தளராத அந்த அணி, முழு மூச்சுடன் போராடி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்குக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக இப்படியான வெற்றிக்காக நாங்கள் மிகக் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த நாளுக்காக நாங்கள் கனவு கண்டு உழைத்தோம். இது ஒரு அதிசயமான உணர்வு. மேலும் 12.1 ஓவரில் இலக்கை துரத்த வங்காளதேச அணி முயற்சிக்கும் என்று எங்களுக்கு தெரியும். இதன் காரணமாக நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம்.

எங்கள் திட்டம் எளிமையாக இருந்தது. நாங்கள் பவர் பிளேவில் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினோம். இந்தப் போட்டிகள் எங்கு முடியும் என்று தெரியாது. திடீரென உங்கள் கைகளை விட்டுப் போனது போல இருக்கும். ஆனால் ஒரே ஒரு விக்கெட் உங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வரும். இது ரன் அடிக்கக்கூடிய ஆடுகளம் இல்லை. எனவே நீங்கள் போட்டியில் தொடர்ந்து இருப்பீர்கள். கடுமையாக உழைத்து அரையிறுதிக்கு வந்ததில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com