ஹர்திக் பாண்ட்யா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.. நீடா அம்பானி

குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
image credit: @mipaltan
image credit: @mipaltan
Published on

மும்பை,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இதனிடையே குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் இணை நிறுவனர் நீடா அம்பானி கூறி இருப்பதாவது;

"மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஹர்திக்கை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் மறுபடியும் கைகோர்ப்பது சந்தோசம்.

மும்பை இந்தியன்ஸ் அணியால் ஒரு திறமையான இளம் வீரராக கண்டெடுக்கப்பட்டதில் இருந்து இப்போது இந்திய அணியின் ஒரு நட்சத்திர வீரர் என்று ஹர்திக் பாண்ட்யா மிக உயர்ந்த நிலையை எட்டி இருக்கிறார். பாண்ட்யா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலம் குறித்து நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com