பாகிஸ்தானை விட இந்தியா பாதுகாப்பு ஆபத்து நிறைந்தது ; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேட்டி

பாகிஸ்தானை விட இந்தியா பாதுகாப்பு ஆபத்து நிறைந்தது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானை விட இந்தியா பாதுகாப்பு ஆபத்து நிறைந்தது ; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேட்டி
Published on

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2009-ம் ஆண்டு போட்டி தொடரில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அணி சென்றது. அவர்கள் சென்ற பேருந்து, லாகூரில் கடாபி ஸ்டேடியம் அருகே பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். இலங்கை அணி வீரர்கள் 6 பேர் காயமடைந்தனர்.

இதன்பின்பு அந்நாட்டில் எந்த பெரிய அணியும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், சமீபத்தில் இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சென்றது.

இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மணி கூறும்பொழுது, பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவரும் சந்தேகம் கொள்ள முடியாது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகரமுடன் நடத்தி முடித்துள்ளோம்.

இதனால் பாகிஸ்தான் பாதுகாப்பு நிறைந்த நாடு என நாங்கள் நிரூபித்துள்ளோம். சிலர் எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால், பாதுகாப்பற்ற நாடு என அவர்கள் நிரூபிக்க வேண்டும்.

இந்த நேரத்தில், பாகிஸ்தானை விட இந்தியா பாதுகாப்பு ஆபத்து நிறைந்தது என அவர் கூறியுள்ளார். எனினும், பாகிஸ்தானுக்கு எதிரான 3 டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் வங்காளதேச அணி விளையாட உள்ளது. இவற்றில் டெஸ்ட் போட்டிகளில் பாதுகாப்பு விவகாரங்களை முன்னிட்டு வங்காளதேச அணி விளையாடாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com