ஐ.பி.எல்.: சாதனை பட்டியலில் பிராவோவை பின்னுக்கு தள்ளி 2-வது இடம்பிடித்த சாவ்லா

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சாவ்லா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 169 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70, மணிஷ் பாண்டே 42 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக பும்ரா, நுவான் துஷாரா தலா 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும், சாவ்லா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த மும்பை அணி திணறலாக பேட்டிங் செய்து 18.5 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இந்த ஆட்டத்தில் மும்பை சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லா ஒரு விக்கெட் எடுத்தார். இதையும் சேர்த்து ஐ.பி.எல்.-ல் அவரது ஒட்டுமொத்த விக்கெட் 184 ஆக (189 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் 2-வது இடத்தில் இருந்த  பிராவோவை (183 விக்கெட்) பின்னுக்கு தள்ளினார்.

அந்த பட்டியல்:-

1. சாஹல் - 200 விக்கெட்டுகள்

2. சாவ்லா - 184 விக்கெட்டுகள்

3. பிராவோ - 183 விக்கெட்டுகள்

4. புவனேஷ்வர் குமார் - 178 விக்கெட்டுகள் 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com