

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வி காரணமாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து கிறிஸ் சில்வர்வுட் விலகினார் .இதனால் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது .இதற்கு பலரது பெயரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பரிசீலித்தது .
சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார்
இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார் . அடுத்த மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து மெக்கல்லம் தனது பணியை தொடங்க உள்ளார் ."முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் மாதம் 2ம் தேதி தொடங்க உள்ளது .
தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் செயல்பட்டு வருகிறார்.