அவருடன் இணைந்து வேலை செய்ய மோர்னே மோர்கல் மிகவும் விரும்புவார் - அல்பி மோர்கல் கருத்து

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார்.
Image Courtesy: ICCTwitter
Image Courtesy: ICCTwitter
Published on

கேப்டவுன்,

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரின் பரிந்துரைப்படி மோர்னே மோர்கல் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மோர்னே மோர்கல் வெளிநாடுகளில் பெரிய அனுபவத்தை கொண்டுள்ளார்.

எனவே வருன் ஆஸ்திரேலியா தொடரில் அவர் இந்திய பவுலர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் தற்போது நம்பர்-1 பவுலராக இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ராவுடன் இணைந்து செயல்பட மோர்னே மோர்கல் விரும்புவார் என அவருடைய சகோதரர் அல்பி மோர்க்கெல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, உறுதியாக தெரியாது (இந்தியாவில் பிடித்த பந்துவீச்சாளர்). ஆனால் அவருக்கு ஜாஹீர் கான் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே சொன்னது போல அவர் என்ன நினைக்கிறார் என்பது துல்லியமாக எனக்குத் தெரியாது.

ஆனால் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் சிறந்த ஆல் பார்மட் பவுலராக திகழ்கிறார். அவர் மிகவும் ஸ்பெஷலானவர். எனவே அவருடன் இணைந்து வேலை செய்ய மோர்னே மோர்கல் மிகவும் விரும்புவார் என்பதை உறுதியாகச் சொல்வேன். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com