ஒருநாள் கிரிக்கெட்: மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த ரோகித் சர்மா

image courtesy:twitter/@BCCI
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வென்றது.
துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று விளையாடுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பந்து வீச உள்ளது.
இதனையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக சந்தித்த 15-வது டாஸ் தோல்வி இதுவாகும். இந்திய கேப்டனாக ரோகித் சர்மா சந்தித்த 12-வது தோல்வியாகும்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் டாசில் தொடர்ச்சியாக அதிக தோல்விகளை சந்தித்த கேப்டன் என்ற மோசமான சாதனையில் பிரையன் லாராவுடன் இணைந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
அந்த பட்டியல்:
1.பிரையன் லாரா/ ரோகித் சர்மா - 12
2. பீட்டர் போரேன் -11
Related Tags :
Next Story






