வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் : இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள் சேர்ப்பு..!

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் : இந்திய அணியில் 2 தமிழக வீரர்கள் சேர்ப்பு..!
Published on

புதுடெல்லி,

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

தென் ஆப்பிரிக்க தொடர் ஏமாற்றத்துடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கபட்ட நிலையில், தற்போது தமிழக வீரர்களான ஷாருக் கான் மற்றும் சாய் கிஷோர் காத்திருப்பு வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் .இவர்கள் தமிழக கிரிக்கெட் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் .

மேலும் கொரானா தொற்றின் காராணமாக அணியில் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் அணியில் சேர்க்கபட்டுள்ளனர் என பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com