ஒருநாள் உலககோப்பை தகுதிச்சுற்று- வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

தகுதிச்சுற்றுக்கான ஷேய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் உலககோப்பை தகுதிச்சுற்று- வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
Published on

ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதிபெற்ற நிலையில், முன்னணி அணிகளில் ஒன்றான வெஸ்ட் இண்டீஸ் தகுதிச்சுற்றில் ஆடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பைக்கு தகுதிபெற வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச்சுற்றில் ஆடவேண்டியுள்ள நிலையில், தகுதிச்சுற்றுக்கான ஷேய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி :

ஷேய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் பவல், ஷமர் ப்ரூக்ஸ், யானிக் காரியா, கீஸி கார்ட்டி, ரோஸ்டான் சேஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், அல்ஸாரி ஜோசஃப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, கீமோ பால், நிகோலஸ் பூரன், ரொமாரியோ ஷெபெர்டு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com