ஊக்கமருத்து தடைக்கு பிறகும் ஐபிஎல்லில் ரூ.75 லட்சத்திற்கு யூசுப் பதான் ஏலம் போகலாம்? #YusufPathan

ஊக்கமருத்து தடைக்கு பிறகும் யூசுப்பதான் ஐபிஎல் போட்டியில் ஒரு வெற்றிகரமான வீரராக உள்ளார்.
ஊக்கமருத்து தடைக்கு பிறகும் ஐபிஎல்லில் ரூ.75 லட்சத்திற்கு யூசுப் பதான் ஏலம் போகலாம்? #YusufPathan
Published on

மும்பை

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் கடந்த ஆண்டு போட்டியில் டர்புடலினின் என்ற தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியதாக பிசிசிஐ அவருக்கு 5 மாதம் தடை வித்தித்தது. இந்த தடை வருகிற 14 ந்தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் வருகிற 27 மற்றும் 28 ந்தேதி பெங்களூரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

யூசுப் பதான் ராஜஸ்தான் ராயல் அணிக்காக 2008 முதல் 2010 ஆண்டு வரை விளையாடினார். பின்னர் 2011 கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.

ஐபிஎல் போட்டிகளில் யூசுப் பதான் மிகவும் வெற்றிகரமான நடுகள பேட்ஸ்மன் இது போன்ற வீரரகள் ரூ. 50 லட்சம், ரூ .1 கோடி, ரூ 1.50 கோடி, 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் தங்கள் அடிப்படை விலையை வைத்துக் கொள்ளலாம். அதன் படி யூசுப் பதான் ரூ 75 லட்சத்திற்கு ஏலம் கேட்கபட்டலாம். ஊக்கமருத்து தடைக்கு பிறகும் யூசுப்பதான் ஐபிஎல் போட்டியில் ஒரு வெற்றிகரமான வீரராக உள்ளார்.

#YusufPathan #IPL

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com