புதுக்கோட்டை சிறுமி கொடூர கொலை: ஹர்பஜன்சிங் வேதனை

புதுக்கோட்டை சிறுமி கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஹர்பஜன்சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை சிறுமி கொடூர கொலை: ஹர்பஜன்சிங் வேதனை
Published on

புதுடெல்லி,

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பார்த்தாலே பதறுதே. பெத்தவங்க எப்படி துடிச்சிருப்பாங்க?. எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க. உலகம் அழியப்போகலை... அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்படின்னு சும்மா சொல்லிட்டு போகலே. ரொம்ப கஷ்டமா இருக்குயா என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த பத்ரிநாத், இது போன்ற கொடூர செயல்களை தடுக்க மரண தண்டனை அளிப்பது தான் சரியான தீர்வாக இருக்கும் என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com