பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் குடல்வால் நோயால் பாதிப்பு ஆஸ்பத்திரியில் அனுமதி

பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் குடல்வால் நோயால் பாதிப்பு ஆஸ்பத்திரியில் அனுமதி.
பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் குடல்வால் நோயால் பாதிப்பு ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

ஆமதாபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான லோகேஷ் ராகுல் நேற்று முன்தினம் இரவு கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டார். மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் குடல்வால் அழற்சியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. குடல்வால், ஆபரேஷன் மூலம் அகற்றப்பட உள்ளது. எனவே அவர் இப்போதைக்கு ஐ.பி.எல். போட்டிகளில் ஆட முடியாது. அவருக்கு பதிலாக நேற்றைய டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் அகர்வால் அணியை வழிநடத்தினார்.

29 வயதான லோகேஷ் ராகுல் 7 ஆட்டங்களில் ஆடி 4 அரைசதம் உள்பட 331 ரன்கள் குவித்துள்ளார். அவர் இல்லாதது பஞ்சாப்புக்கு நிச்சயம் பின்னடைவு தான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com