20 ஓவர் உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு - காயம் காரணமாக ரஸ்ஸி வான் டெர் டுசென் விலகல்

20 ஓவர் உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து காயம் காரணமாக ரஸ்ஸி வான் டெர் டுசென் சேர்க்கப்படவில்லை.
Image Courtesy: ICC Twitter
Image Courtesy: ICC Twitter
Published on

7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தப் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது.

இந்நிலையில் டி-20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் இடம் பெறவில்லை.

டி-20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்கா அணி விவரம்:

டெம்பா பவுமா ( கேப்டன் ), குயிண்டன் டி காக், ஹென்ரிச் கிளாசன், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி ங்கிடி, ஆன்ரிச் நோர்ட்ஜே, வெய்ன் பார்னெல், டுவைன் பிரிடோரியஸ், ககிசோ ரபடா, ரீல்லி ரோசவ், தப்ரைஸ் ஷம்சி, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்.

மாற்று வீரர்கள்: பிஜோர்ன் பார்டுயின், மார்கோ ஜான்சன், ஆண்டில் பெக்லுக்வாயோ.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com