டி20 கிரிக்கெட்: நமீபியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜிம்பாப்வே

Image Courtesy: @ZimCricketv
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடக்கிறது.
புலவாயோ,
நமீபியா கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நமீபியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 211 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 94 ரன்கள் எடுத்தார்.
நமீபியா தரப்பில் அலெக்சாண்டர் வோல்ஷெங்க் 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட நமீபியா 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 33 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிளெஸ்ஸிங் முசாரபாணி, சிக்கந்தர் ராசா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஜிம்பாப்வே முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடக்கிறது.






