நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; மேக்ஸ்வெல் ஆடுவது சந்தேகம்..?


நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்; மேக்ஸ்வெல் ஆடுவது சந்தேகம்..?
x

Image Courtesy: @ICC

தினத்தந்தி 30 Sept 2025 12:07 PM IST (Updated: 30 Sept 2025 3:58 PM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் பே ஓவலில் நடக்கிறது.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல் வலைப்பயிற்சியின் போது காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக அவர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது.

1 More update

Next Story