உலகக்கோப்பை டி 20: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி

நெதர்லாந்துக்கு எதிரான டி 20 லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை டி 20: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி
Published on

அபுதாபி,

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் லீக் போட்டிகள் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்து- அயர்லாந்து அணிகள் விளையாடியது

இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரரான மேக்ஸ் ஓ டவ்ட் 7 பவுண்டரிகளுடன் அரைசதத்தை கடந்தார். அவர் 51 ரன்களில் வெளியேறிய நிலையில், மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்கத் தவறினர். குறிப்பாக அயர்லாந்து அணியின் பந்துவீச்சாளர் கர்டிஸ் கேம்பர் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனை படைத்தார். அவரின் வேகத்தில் நெதர்லாந்து அணி 106 ரன்களுக்கு சுருண்டது.

பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த அயர்லாந்து அணியின் கர்டிஸ் கேம்பர் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com