ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் ஷூவில் இடம்பெற்ற வாசகம்...எதிர்ப்பு தெரிவித்த ஐசிசிக்கு வீரரின் பதில்

உஸ்மான் கவாஜா அணிந்திருந்த ஷூவில் 'அனைத்து உயிர்களும் சமம்' என்ற வசனம் இடம்பெற்று இருந்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் ஷூவில் இடம்பெற்ற வாசகம்...எதிர்ப்பு தெரிவித்த ஐசிசிக்கு வீரரின் பதில்
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜாவும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக பயிற்சியின்போது உஸ்மான் கவாஜா அணிந்திருந்த ஷூவில் 'அனைத்து உயிர்களும் சமம்' என்ற வசனம் இடம்பெற்று இருந்தது. ஐசிசி விதிமுறைப்படி எந்தவொரு அரசியல் குறித்தான பதிவையும் வீரர்கள் அணிந்திருக்கக்கூடாது. இதையடுத்து, அவர் நாளைய போட்டியில் விளையாட வேண்டும் என்றால், அந்த ஷூவைப் பயன்படுத்தக்கூடாது என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள கவாஜா, "அனைத்து உயிர்களும் சமம் என நான் கூறியதில் எந்தத் தவறும் இல்லை; அரசியலும் இல்லை. நான் எந்த தரப்பின் பக்கமும் நிற்கவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், யூதர் என எந்த மதத்தைச் சேர்ந்தவர் உயிர் என்றாலும், அது ஒன்று எனதான் கூறுகிறேன். ஆனால், என்னை தவறு எனக் கூறும் நபர்கள் எவ்வளவு பெரிய தவறைச் செய்கின்றனர்" என பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் ஐசிசி-யின் விதியை மதித்து அவர் மற்றொரு ஷூவை அணிந்து பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com