விராட் கோலியுடன் கே.ஜி.எப் 2 திரைப்படத்தை பார்த்த டூ பிளேசிஸ் மேக்ஸ்வெல்..!!

பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் கேஜிஎப் 2 திரைப்படத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
Image Courtesy : @RCBTweets
Image Courtesy : @RCBTweets
Published on

மும்பை,

கேஜிஎப் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்த இதுவரை 550 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்திலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேரளா, ஆந்திரா, வட இந்தியாவிலும் வசூலில் பல்வேறு சாதனைகளை கேஜிஎப் 2 படைத்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் வெளியே செல்ல முடியாது என்பதால், கிரிக்கெட் வீரர்கள் கேஜிஎப் திரைப்படத்தை காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பெங்களூரு அணி நிர்வாகம் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி, கேஜிஎப் 2 திரைப்படத்தை ஹோட்டல் லாபியில் திறந்தவெளியில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, அதிநவீன ஒலி, ஒளி வசதியுடன் கே.ஜி.எப் 2 திரைப்படத்தை பெங்களூரு அணி வீரர்களுக்கு திரையிட்டனர். இந்தப் படத்தை விராட் கோலி, தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com