சென்னை - பஞ்சாப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது ? வெளியான அறிவிப்பு

டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை - பஞ்சாப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை எப்போது ? வெளியான அறிவிப்பு
Published on

சென்னை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், அடுத்த மாதம் 1ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டிக்கெட் வரும் 29ம் தேதி (நாளை மறுநாள்) விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, காலை 10.40 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com