19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் ஷபாலி வர்மா...!

19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி மாதம் நடைபெறுகிறது.
Image Courtesy: Instagram shafalisverma17
Image Courtesy: Instagram shafalisverma17
Published on

மும்பை,

19 வயதுக்கு உட்பட்ட முதலாவது பெண்கள் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி மாதம் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணியுடன் யுஏஇ, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து அணிகளுடன் இந்திய அணி உள்ளது. இந்த உலகக்கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் என மொத்தம் 12 அணிகள் குரூப் 6 சுற்றுக்கு முன்னேறும். அங்கு 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டும் தங்களுக்குள் மோதும். குரூப் 6 சுற்றின் முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய பெண்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ( 19 வயதுக்கு உட்ப்டோர்) தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியுன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் ஷபாலி வர்மா தலைமை தாங்குகிறார். இந்திய பெண்கள் அணி விவரம் வருமாறு:-

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய பெண்கள் அணி ( 19 வயதுக்கு உட்பட்டோர்):-

ஷபாலி வர்மா ( கேப்டன்), ஸ்வேதா ஷெராவத் ( துணை கேப்டன் ), ரிச்சா கோஷ் ( விக்கெட் கீப்பர் ), ஜி த்ரிஷா, சவுமியா திவாரி, சோனியா மெஹ்தியா, ஹர்லி ஹாலா, ஹிரிஷிதா பாசு ( வி.கீ), சோனம் யாதவ், மன்னத் காஷயப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, டைட்டஸ் சாது, பலாக் நாஸ், ஷப்னம் எம்.டி, ஷிகா, நஜ்லா சிஎம்சி, யாஷா ஸ்ரீ.

உலகக்கோப்பைக்கான இந்திய பெண்கள் அணி ( 19 வயதுக்கு உட்படோர் ):-

ஷபாலி வர்மா ( கேப்டன்), ஸ்வேதா ஷெராவத் ( துணை கேப்டன் ), ரிச்சா கோஷ் ( விக்கெட் கீப்பர் ), ஜி த்ரிஷா, சவுமியா திவாரி, சோனியா மெஹ்தியா, ஹர்லி ஹாலா, ஹிரிஷிதா பாசு ( வி.கீ), சோனம் யாதவ், மன்னத் காஷயப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, டைட்டஸ் சாது, பலாக் நாஸ், ஷப்னம் எம்.டி

மாற்று வீரரகள்:- ஷிகா, நஜ்லா சிஎம்சி, யாஷா ஸ்ரீ.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com