டோக்கியோ 2020 க்கான இந்தியா ஹாக்கி அணியில் இடம்பெறுவேன் -இளம் வீரர் தில்பிரீத் சிங் நம்பிக்கை

டோக்கியோ 2020 க்கான இந்தியா ஹாக்கி அணியில் இடம்பெறுவேன் என இளம் வீரர் தில்பிரீத் சிங் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
டோக்கியோ 2020 க்கான இந்தியா ஹாக்கி அணியில் இடம்பெறுவேன் -இளம் வீரர் தில்பிரீத் சிங் நம்பிக்கை
Published on

பெங்களூரு

2018 ஆசிய விளையாட்டு வெண்கல பதக்கம் வென்ற அணி வீரரான தில்பிரீத், விளையாட்டின் தொழில்நுட்ப அம்சங்களை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார், மேலும் முகாமில் உள்ள மூத்த வீரர்களுடன் நேரத்தை செலவிடுவது அவருக்கு உதவியாக உள்ளது என கூறி உள்ளார்.

இது குறித்து தில்பிரீத் ஹாக்கி இந்தியாவிடம் கூறும் போது

எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத காரணிகளைப் பற்றி கவலைப்பட நாங்கள் விரும்பவில்லை. எனக்காக ஒரு வலுவான தனிதன்மையை உருவாக்கி வருகிறேன். எனது திறமைகளை வெளிப்படுத்தவும், எனது தகுதியை நிரூபிக்கவும் முகாமில் நான் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். ஒவ்வொரு பயிற்சியிலும் நாங்கள் 100 சதவீத திறமையை வெளிப்படுத்துகிறோம் என்று கூறினார்

மேலும் டோக்கியோ 2020 ஐ ஒத்திவைப்பது ஒரு ஆசீர்வாதம் என்றும், இது அவரைப் போன்ற வீரர்களை மேம்படுத்த உதவும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com