துளிகள்

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது.
துளிகள்
Published on

* இலங்கைக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து-இலங்கை இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி பல்லகெலேயில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

*விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. பெங்களூருவில் இன்று காலை 9 மணிக்கு நடக்கும் முதலாவது அரைஇறுதியில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. மும்பை அணியில் பிரித்வி ஷா, ரஹானே ஆகியோர் விளையாட உள்ளனர்.

*தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் டுமினி, அண்மையில் ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடிய போது வலது தோள்பட்டையில் காயமடைந்தார். காயத்துக்கு அவர் ஆபரேஷன் செய்ய இருக்கிறார். இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஆட முடியாது. இதே போல் விரலில் காயமடைந்துள்ள அம்லாவும் ஆஸ்திரேலிய பயணத்தில் இருந்து விலகியுள்ளார். தென்ஆப்பிரிக்க அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com