மனைவியுடன் சென்ற பிரபல குத்துச்சண்டை வீரரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை- அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!!

பிரபல குத்துச்சண்டை வீரரிடம் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Image Courtesy : Twitter @FaryalxMakhdoom
Image Courtesy : Twitter @FaryalxMakhdoom
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் அமீர் கான். இவர் உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றவர். 35 வயதான இவருக்கு பர்யால் மக்தூம் என்பவருடன் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கடந்த வாரம் இவர் தனது மனைவி பர்யால் மக்தூம் உடன் மேற்கு லண்டனில் உள்ள லேட்டன் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கி முனையில் இவரிடம் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமீர் கான் " மேற்கு லண்டனின் லேட்டன் சாலையில் சென்ற போது அடையாளம் தெரியாத 2 பேர் துப்பாக்கி முனையில் எனது கைக்கடிகாரத்தை கொள்ளை அடித்தனர். அதிர்ஷ்டவசமாக பர்யால் மக்தூம் எனக்கு பின்னால் சிறு தூரம் தள்ளி இருந்தார்.

நல்ல வேளையாக நாங்கள் இருவரும் நலமுடன் உள்ளோம் " என அவர் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது வரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com