டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து காயம் காரணமாக தடகள வீராங்கனை ஹீமா தாஸ் விலகல்

காயம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தடகள வீராங்கனை ஹீமா தாஸ் விலகியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி, 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23-ம் தேதி 32-வது ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள 117 வீரர்கள் இதுவரை தகுதிபெற்றிருக்கிறார்கள். இதில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தடகள போட்டியில் 19 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில் காயம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாஸ் விலகியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், தவறான நேரத்தில் எனக்கு ஏற்பட்ட காயத்தினால் நான் எனது முதல் ஒலிம்பிக்கை மிஸ் செய்கிறேன். நிச்சயம் இதிலிருந்து மீண்டு வருவேன். எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என அனைவரது ஆதரவுக்கும் நன்றி. 2022இல் நடைபெற உள்ள காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் மாதிரியான தொடர்களில் வலுவான கம்பேக் கொடுப்பேன் என்று ஹீமாதாஸ் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com