

சன்சியான்,
கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் சன்சியான் நகரில் பால்மா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்கொரிய வீராங்கனை அன் சியோங், தாய்லாந்து நாட்டு வீராங்கனை போர்ன்பவீ சோச்சுவோங்குடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் அன் சியோங், 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சோச்சுவாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.