

தோகா,
14-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 244.5 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். வடகொரியா வீரர் கிம் சோங் குக் (246.5 புள்ளிகள்) தங்கப்பதக்கமும், ஈரான் வீரர் ஜாவித் (221.8 புள்ளிகள்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் வர்மா 5-வது இடமே பிடித்தார். ஆசிய மற்றும் உலக கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த 17 வயதான சவுரப் சவுத்ரி ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.