பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் இருந்து ஸ்ரீகாந்த் விலகல்

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் இருந்து ஸ்ரீகாந்த் விலகி உள்ளார்.
பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் இருந்து ஸ்ரீகாந்த் விலகல்
Published on

புதுடெல்லி,

5-வது பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டி பல்வேறு நகரங்களில் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 20-ந் தேதி முதல் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி வீரரான 26 வயது ஸ்ரீகாந்த் விலகி இருக்கிறார். அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நடைபெறும் சர்வதேச போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த இந்த போட்டியில் பெங்களூரு ராப்டர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதில் ஸ்ரீகாந்த் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஸ்ரீகாந்த் தனது டுவிட்டர் பதிவில், கடினமான பாதை எனக்கு காத்து இருக்கிறது. என் மீதான எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது. சர்வதேச போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் இந்த சீசனுக்கான பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் விளையாடவில்லை. பெங்களூரு ராப்டர்ஸ் அணிக்கு எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டியில் இருந்து ஏற்கனவே இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் விலகி இருந்தார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் தரவரிசையில் முன்னிலை வகிக்க வேண்டியது அவசியமானதாகும். எனவே சர்வதேச போட்டியில் அதிக அளவில் விளையாட ஏதுவாக இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com