'என்னுடைய மிகப்பெரிய பலமே என் ரசிகர்கள்தான்' - நடிகர் மம்முட்டி


மம்முட்டியின் டர்போ
x

என்னுடைய மிகப்பெரிய பலமே என் ரசிகர்கள்தான் என்று நடிகர் மம்முட்டி கூறினார்

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவர் நடித்த பிரம்மயுகம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து 'டர்போ' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வைசாக் இயக்கி இருக்கிறார். வைசாக் இதற்கு முன் மோகன்லாலை வைத்து புலிமுருகன் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். படத்தின் கதையை மிதுன் மானுவேல் தாமஸ் எழுதியுள்ளார். சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வரும் 23-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. முன்னதாக இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. தற்போது இப்படத்தின் புரமோசன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

அவ்வாறு படத்தின் புரமோசன் பணியின்போது நடிகர் மம்முட்டி பேசுகையில், என்னுடைய மிகப்பெரிய பலமே என் ரசிகர்கள்தான் என்று நடிகர் மம்முட்டி கூறினார். 42 வருடங்களாக என்னோடு நிற்கின்றார்கள். தொடர்ந்து எனக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு கூறினார்.


Next Story